Workshop on Tamil Computing (20-01-2012)

எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயமும், இந்திய மொழிகள் நடுவண் நிறுவன மொழித் தரவுத்தொகுப்புச் சேர்த்தியமும் இணைந்து ”தமிழ்க் கணினிமொழியியல்” பயிலரங்கை 11 நாட்கள் நடத்தி வருகிறது. இதன் துவக்கவிழா எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் 20ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெற்றது. தலைமை உரையை எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர், முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்கள் ஆற்ற, மைசூர் சிஐஐஎல் இயக்குநர் முனைவர் எல்.இராமமூர்த்தி மையக் கருத்துரை வழங்கினார். எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் சிறப்புரையை அரசு முதன்மை செயலாளர் திரு.ம. குற்றாலிங்கம் அவர்கள் ஆற்றினார்கள். கணித் தமிழ்ச்சங்க தலைவர் ஆண்டோ பீட்டர், முனைவர் ந.தெய்வ சுந்தரம், மணிமணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பயிற்சி பட்டறையில் தமிழ்க்கணினி கருத்துரை ஆற்ற 28 அறிஞர்கள் கலந்து கொள்கின்றனர். 100 பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
|
Felicitation to Ln.M.Srinivasan(18-11-2011)
கணித்தமிழ்ச்சங்க உறுப்பினர் லயன்.எம்.சீனிவாசனுக்கு சென்னை பாம்குரோவ் ஓட்டலில் பாராட்டு விழா நடைபெற்றது. தமிழ்க்கணினி மற்றும் மொழிப்பெயர்ப்பு பணிகளுக்காக இப்பாராட்டு ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விழாவில் திரு.காந்தி கண்ணதாசன், முனைவர்.அருள் நடராசன் மற்றும் பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர்.
|
New Tamilnadu Minister (07-11-2011)
 
பதமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக திரு.கே.செங்கோட்டையன், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக திரு.எம்.பரஞ்ஜோதியும் நியமிக்கப்பட்டனர்.
|
New Director For Tamil Development (02-11-2011)
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறை இயக்குநராக டாக்டர்.காட்டுப்பாக்கம் முனுசாமி சேகர் அவர்கள் பொறுப்பேற்றார்
|
12th Planning Commission (IT Dept) Sub-Group on Tamil Computing (28-10-2011) |
1 |
Dr. P.R. Nakkeeran,
Director,
Tamil Virtual Academy,
Anna University Campus,
Gandhi Mandapam Road,
Kottur, Chennai-25. |
Chairman
|
2 |
Thiru. Mani M. Manivannan,
Senior Director of Engineering,
India Consumer Products & Solutions Engg. R&D,
Symantec Corporation,
Chennai. |
Member |
3 |
Thiru.P. Chellappan,
Palaniappa Brothers,
'Konar Maaligai',
No. 25, Peter's Road,
Royapettah
Chennai – 600014 |
Member |
4 |
Thiru.M. Anto Peter,
President,
Kani Thamizh Sangam,
Chennai.
No.170, Nelson Manickam Road,
Chennai-29. |
Member |
5 |
Prof. V. Krishnamoorthy,
Learnful Systems,
Chennai.
|
Member |
6 |
Dr.N. Deiva Sundaram,
Former Professor,
University of Madras. |
Member |
|
Felicitation to Mr.Mafoi.Pandiyarajan,MLA (29-08-2011)

ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கணித்தமிழ்ச்சங்க கூட்டத்தில் விருதுநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், மாஃபா பாண்டியராஜன் தலைமையெற்று நடத்த, திரு. இலக்குவனார் திருவள்ளுவன் கருத்துரை வழங்கினார்.
|
Greetings to Dr.Santhosh Babu. I.A.S.

புதிய தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட டாக்டர்.சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ். அவர்களை கணித்தமிழ்ச்சங்க பிரதிநிதிகள் தலைமைச் செயலகத்தில் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
|
New Secretary of TN (16-05-2011)

புதிய தமிழக அரசு செயலர்கள் தமிழ் வளர்ச்சித்துறை புதிய செயலாளராக திரு.டி.என்.ராமநாதன். ஐ.ஏ.எஸ் அவர்களும், தகவல் தொடர்புத்துறை புதிய செயலாளராக திரு.சந்தோஷ்பாபு ஐ.ஏ.எஸ் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
|
New Ministers of TN (16-05-2011)
 
தமிழகத்தின் புதிய அமைச்சரவை தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்களால் அறிவிக்கப்பட்டது. தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக எஸ்.பி.சண்முகநாதனும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக ஆர்.பி.உதயக்குமார் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். கணித்தமிழ்சங்கத்தின் சார்பாக அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்..
|
Tamil Internet Conference |
அமெரிக்காவில் ஜூன் 17ந் தேதி பத்தாம் தமிழ் இணைய மாநாடு நடைபெற்றது |
Kanian Poongundranar Award
தமிழக அரசின் சிறந்த தமிழ் மென்பொருட்களுக்கான முதல் விருது
திரு.விஜயன் அவர்களுக்கு கோவை செம்மொழி மாநாட்டில் அளிக்கப்பட்டது.
|
Tamil Unicode Convergence Resolution
Tamil Unicode Convergence Resolution handed over by INFITT Chair to Committee Chair Dr.M.Anandakrishnan on 17th May 2010 |
தமிழ் விக்கிபீடியா கட்டுரைப் போட்டி(30/3/10)
செம்மொழி மாநாட்டையொட்டி கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் விக்கிபீடியா கட்டுரைப் போட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. |
கணினித்தமிழ் கருத்தரங்கு (24.02.2010 to 27.02.2010)
சென்னை பல்கலைக்கழகத்தில் 3 நாள் கணினித்தமிழ் கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. மொழியியல் பேராசிரியர் தெய்வசுந்தரம் சிறப்புற நடத்த, கணித் தமிழ் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
|
செம்மொழி மாநாடு: இணைய மாநாட்டுக் குழு கூட்டம் (02.02.2010) |
 |
 |
கோவை செம்மொழி மாநாட்டை ஒட்டி நடைபெறும் உலகத்தமிழ் இணைய மாநாட்டில் கணித்தமிழ்ச் சங்கம் பங்காற்றுதல் குறித்து சிறப்புக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு டாக்டர்.மு.அனந்தகிருஷ்ணன் தலைமை ஏற்று சிறப்பித்தார்கள், நாங்கம் புருஷோத்தமன், சிங்கப்பூர் மணியம் மற்றும் பல தமிழ் நண்பர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
|
செம்மொழி மாநாட்டின் தலைமைச் செயலகக் கூட்டம் (19-01-2010)
கோவையில் தமிழக அரசின் சார்பில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் உலகத் தமிழ் இணைய மாநாடும் நடப்பதையொட்டி, தலைமைச் செயலகத்தில், தமிழ் இணைய மாநாட்டுக் குழுவின் கூட்டம், குழுவின் தலைவர் கான்பூர் ஐஐடி தலைவர் பேராசியர் மு.ஆனந்த கிருட்டிணன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் குழுவின் அமைப்பாளர் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, மாநாட்டின் சிறப்பு அலுவலர் அலாவுதீன், உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கணேசன், உறுப்பினர்கள் மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி,கணித்தமிழ்ச் சங்க தலைவர் மா.ஆண்டோ பீட்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
|
மின்புத்தகம் பயிற்சிப் பட்டறை (06.12.2009) |
|
 |
கணித்தமிழ்ச் சங்கமும், தமிழ் மரபு அறக்கட்டளையும் இணைந்து நடத்திய “மின்புத்தங்கள் தயாரிப்பது எப்படி?” என்ற பயிற்சிப் பட்டறை சென்னையில் நடைப்பெற்றது. இதன் துவக்க நிகழ்ச்சியில் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்.மா.ராஜேந்திரன், திரு.லேனா தமிழ்வாணன்,திரு நரசைய்யா, திரு.மாலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பயிற்சியை ஜெர்மனியை சேர்ந்த திருமதி.சுபாஷினி டிரம்மல் நடத்தினார். |
பாராட்டுக்கூட்டம் (11.11.2009)

ஜெர்மனி தமிழ் இணைய மாநாடு குறித்த சிறப்பு மாதக் கூட்டம் சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் நடைபெற்றது. கூட்ட முடிவில் உத்தமம் இயக்குநர் பெருங்கணிக்கோ கவியரசனுக்கும், தமிழக அரசின் மொழிப்பெயர்ப்புத்துறை இயக்குநர் அருள் நடராசனுக்கு பாராட்டும் நடைபெற்றது. ஜெர்மனி மாநாட்டுக்கு உதவிய காக்ஸ் & கிங்ஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. |
ஐரோப்பாவில் தமிழ் மென்பொருள் வளர்ச்சி(08-09-2009)

ஐரோப்பாவில் தமிழ் மென்பொருள் கண்காட்சிகளை நடத்திட கணித்தமிழ்ச்சங்க நிர்வாகிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் சிறப்புக்கூட்டம் நடத்தினர். இக்கூட்டத்தில் உலகத்தமிழர் பேரவை தலைவர் ஜனார்தனம், பிரான்ஸ் தமிழ்ச்சங்க பிரதிநிதி கோகுலன், தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராஜன், எம்பிஎல்ஏ சந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
|
ஜெர்மனி தமிழ் இணைய மாநாடு குறித்த மாதக்கூட்டம்(28-07-2009)

ஜெர்மனி தமிழ் இணைய மாநாடு குறித்த விழிப்புணர்வு கூட்டம் சென்னை பல்கலைக்கழக தமிழ்த் துறையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் டாக்டர்.தெய்வசுந்தரம், திரு.டி.என்.சி.வெங்கட்ரங்கன் மற்றும் திரு. வெங்கடேஷ் (காக்ஸ் & கிங்ஸ்) அவர்கள் கலந்து கொண்டு விளக்கம் அளித்தனர்.
|
தமிழ் மென்பொருள் கண்காட்சி (04-07-2009)

சென்னை தமிழ் மென்பொருள் கண்காட்சியை திருமதி. கனிமொழி எம்.பி. அவர்கள் துவக்கி வைத்தார்.
|
இங்கிலாந்து தமிழறிஞர் சிவாப்பிள்ளை
12.12.2008

பாரதியார் நினைவுநாளையட்டி நடைபெற்ற கணித்தமிழ்ச்சங்க மாதக்கூட்டத்தில் இங்கிலாந்து தமிழறிஞர் சிவாப்பிள்ளை அவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.
|
| |