|
தமிழ் மென்பொருள் கண்காட்சி
04:07:2009
நிகழ்ச்சி தொகுப்பு :
கணித்தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஐந்து நாட்கள் "தமிழ் மென்பொருள் கண்காட்சி", 04.07.2009 சனிக்கிழமையன்று மாலை ஆரம்பமானது. கதீட்ரல் சாலையிலுள்ள தாஸ் கம்யூனிட்டி ஹாலில் நடைபெறும் இக்கண்காட்சியினை திருமதி.கனிமொழி, மாநிலங்களவை உறுப்பினர் அவர்கள் குத்துவிளக்கு ஏற்று தொடங்கிவைத்தார்கள்.
நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த திருமதி கனிமொழி M.P. மற்றும் நூலக ஆணையர் திரு அறிவொளி உள்ளிட்ட அனைவரையும் திரு அருள் நடராசன் அவர்கள் அன்புடன் வரவேற்றும் பேசினார்.
கண்காட்சியின் நோக்கம் குறித்து உரையாற்றிய திரு.ஆண்டோ பீட்டர் [தலைவர், கணித்தமிழ்ச்சங்கம்] அவர்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள குறுந்தகடுகள், சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோருக்கு, தமிழில் கணினி மூலம் எளிதில் பல்வேறு செய்திகளை அறிவதற்குத் துணைபுரியும். இந்த வகையான கண்காட்சிகளை மாநிலம் முழுவதும் நடத்துகிறது, மாநாடுகள் மூலம் மக்களுக்கு அருந்தொண்டாற்றுகின்றது என்றெல்லாம் விவரித்தார்.
திரு அருள் நடராஜன் அவர்கள், தற்கால நிலையில், மக்களிடம் நூல்களைப் படிக்கும் பழக்கம் குறைந்து வருவது குறித்து தனது ஆதங்கத்தை வெளிபடுத்தி, கணித்தமிழ்ச்சங்கம் நற்பணியாற்றி, நூல்களைப் படிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும் என்ற தனது ஆவலை வெளியிட்டார்.
தலைமையேற்று உரையாற்றிய திருமதி.கனிமொழி அவர்கள், மற்றமொழிகளைப் போல, தமிழ் மொழியும் காலத்திற்கேற்றவாறு மாற்றம் அடைய வேண்டும், மொழியின் சிறப்பு மேலும் பெருக கணித்தமிழ்ச்சங்கம் போன்ற நிறுவனங்கள் அதிக ஊக்கமளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இவ்வாறான மென்பொருள் கண்காட்சி, மாணவர்கள், சிறுவர்கள் மற்றும் கல்விகற்போர் அனைவருக்கும் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள அனைத்து வகையான குறுந்தகடுகள் மற்றும் நூல்களையும் பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தார், தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள், தனது நன்றியுரையின் ஊடே, தமிழ் மொழி உள்ளிட்ட ஆறு மொழிகள் தான் 5 (அ) 6 நூற்றாண்டுகளுக்குப் பின் உலகத்தில் நிலைத்து நிற்பதாக ஆய்வாளர்கள் கணித்திருக்கிறார்கள் என்ற இனிய தகவலைத் தெரிவித்தார்.
மாணவர்களுக்கான குறுந்தகடுகளை, தலைமை வகித்த திருமதி.கனிமொழி அவர்கள் (கணித்தமிழ்ச் சங்கத்தின் இலவச அன்பளிப்பாக ) வழங்கினார்.
திரு.கிருஷ்னாமூர்த்தி அவர்கள் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.
|